மகன்களுடன் ஐபிஎல் மேட்ச் பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - வைரல் போட்டோஸ்!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே திடீரென இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
விவகாரத்துக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களை இயக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே யோகா, ஒர்கவுட் என உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஐஸ்வர்யா தற்போது தனது மகன்கள் யாத்ரா லிங்காவுடன் ஐபிஎல் மேட்ச் பார்த்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.