1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (18:22 IST)

தனுஷை பிரிந்த பின் பிரபல தொழிலதிபருடன் நெருக்கமான ஐஸ்வர்யா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 18 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த தனுஷை காதல் திருமணம் செய்துகொண்டார். தனுஷை விட ஐஸ்வர்யாவுக்கு 2 வயது அதிகம் என்பதால் அப்போது அவர்களின் திருமணம் குறித்து கிசுகிசுக்கப்பட்டது.
 
அத்துடன் இவர் ஏற்கனவே நடிகர் சிம்புவை காதலித்து கழட்டிவிட்டு பின்னர் தனுஷை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் அவர்களின் மணவாழ்க்கையில் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரு மகன்கள் அவருக்கு இருக்கின்றனர். 
 
இந்த நேரத்தில் தான் 18 ஆண்டுகளாக நீடித்து வந்த மணவாழ்க்கையை சுமூகமாக முடித்துக் கொள்வதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், விவாகரத்து செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் தனுஷை பிரிந்த பின்னர் ரஜினியின் சலாம் படத்தை இயக்க உள்ளார். 

அதன் வேளைகளில் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது பிரபல தொழிலதிபரான ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.