அப்பவும் இப்பவும் நான் சினேகாவுக்கு fan girlதான் – இளம் நடிகையின் பதில்!
நடிகை சினேகாவோடு விளம்பரப் படத்தில் நடித்துள்ளது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சிறுவயது தருணம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
புன்னைகை அரசியாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை மற்றும் ஆத்யந்தா என்ற பெண் குழந்தை உள்ளனர். அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த ஸ்னேகா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரோடு ஒரு விளம்பரப்படத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினேகாவை சிறுவயதில் ஆச்சரயமாகப் பார்த்த ஒரு தருணத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இதுபற்றி நான் என்னுடைய சிறுவயதில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்த ஒரு படப்பிடிப்பை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். என் அம்மா என்னை போதும் வா என அழைத்தும், நான் செல்லாமல் சினேகாவை வைத்த கண் வாங்காமல் ஆச்சர்யமாக பார்த்தேன். இப்போது அவருடன் சேர்ந்து நடித்துள்ளேன். இப்போதும் அதே வியப்போடுதான் அவரைப் பார்க்கிறேன் என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.