விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை! உற்சாகத்தில் கொண்டாடிய ரசிகர்கள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன் முறையாக விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபல தொலைக்காட்சியில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து அதையடுத்து கலைஞர் டிவியில் ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘காகா முட்டை’ உட்பட பல படங்களில் நடித்து அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவாரகொண்டா நடிக்கவுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய் தேவர் கொண்டாவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடப்பிடித்துள்ளார். தற்போது அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி சேர்வதால் இவர்கள் இருவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் .