முன்னாள் கணவர் தனுஷின் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா !
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது சமூகவலைதளக் கணக்கில் முன்னாள் கணவர் தனுஷின் பெயரை நீக்கியுள்ளார்.
சமீபத்தில் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான நான்கு மொழிகளில் உருவாகியுள்ள பயணி ஆல்பத்தை தமிழில் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நண்பர் ஐஸ்வர்யாவின் பயணி மியூசிக் ஆல்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறி இருந்தார். இந்த டிவீட் இணையத்தில் வைரல் ஆனது. இதையடுத்து இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் நன்றி தனுஷ்.. உங்கள் பயணம் சிறக்க தெய்வ அருள் கிடைக்கட்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த டுவீட்டைப் பதிவிடும்போது, ஐஸ்வர்யா தனது பெயருக்குப் பின் முன்னாள் கணவன் தனுஷின் பெயர் இணைந்திருந்தது.
ஆனால், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது சமூகவலைதளக் கணக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றியுள்ளார்.
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.