5 வருடங்களுக்கு பின் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்!

dhanush
தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்!
siva| Last Modified செவ்வாய், 13 அக்டோபர் 2020 (17:05 IST)
தனுஷ் நடித்த 3, வேலையில்லா பட்டதாரி, மாரி மற்றும் தங்க மகன் ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த நான்கு படங்களும் இசையாலே சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமன்றி தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல், காக்கி சட்டை மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென அனிருத் மற்றும் தனுசு ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக இணைந்து பணி புரிய வில்லை என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது மீண்டும் தனுஷ்-அனிருத் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள தனுஷின் 44 வது படத்தில் அனிருத் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதற்கான பாடல் கம்போஸ் பணிகளையும் அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :