’’எத்தனை நாள் உன்னைப் பார்க்காமல்....இதுதான் உண்மையான காதல்...’’ நடிகர் தனுஷ் உருக்கம்

danush
Sinoj|

பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் சாரா அலிகான் ஆகியோருடன் நடிகர் தனுஷ் இணைந்து நடிக்கும் அத்ரங்கி ரே.

இப்படத்தை ஆனந்த் எல்.ராய் என்பவர் இயக்கிவருகிறார். இத்திரைப்படம் கொரொனா ஊரடங்கு காரணமாக 200 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் தொடங்கப்படாத நிலையில் கடந்த
5 ஆம் தேதி முதல் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.


தொடர்ந்து 15 நாட்களுக்கு ஷூட்டிங் நடக்கவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து இதில் நடிகர் தனுஷ் கலந்துகொள்வார் என்று தெரிவித்தனர்.

அதன்படி தனுஷ் அத்ரங்கி ரே பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.அப்போது கேமராவை அணைத்தபடி உண்மையான லவ்…நான் உன்னை மிஸ் செய்தேன் என்று தனது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

கடந்த 200 நாட்களுக்கு மேலாக கொரொனா ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளதையே
தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம் திரையரங்கில் ரிலீஸாகத் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.ONE TRUE LOVE ❤❤❤ missed you so much

A post shared by Dhanush (@dhanushkraja) onஇதில் மேலும் படிக்கவும் :