தெய்வங்கள் பட்டியலில் இதையும் சேர்த்து கொள்ளுங்கள்: கமல் பேச்சு
நடிகர் கமல்ஹாசன் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை தெய்வங்களின் பட்டியலில் சேர்த்து கும்பிட வேண்டும் என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் நடைபெற்ற விவசாயிகள் சங்க கூட்டத்தில் நடிகர் கமல் கலந்து கொண்டார். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, கூட்டுறவு வங்கிகளில் நிபந்தனையின்றி கடன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை விவசாயிகள் கமலிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய கமல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளை நீங்கள் கும்பிடும் தெய்வங்களின் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள். பகுத்தறிவாளனான நானே கூறுகிறேன் என்றால் அந்த அளவிற்கு பதறிப்போய் உள்ளேன் என்று புரிந்து கொள்ளுங்கள். விவசாயிகள் மத்தியில் வாக்கு சேகரிக்க வரவில்லை; சோறு சேகரிக்கவே வந்துள்ளேன் என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், "தங்களது குறைகளை சொல்லி ஒப்பாரி வைக்காமல், இதுதான் நிலைமை, இதுவெல்லாம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
வேளாண் துறையை தொழில்மயக்கினால்தான் அனைவரும் வாழ முடியும். பக்கத்தில் உள்ள மாநிலங்கள் கூட நாம் சோறு போடுவோம் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். 8 ஆயிரம் வருடத்து பழையமான தொழில் விவசாயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.