1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (14:13 IST)

கமல் அரசியல் வருகை பற்றி கருத்து கூறிய நடிகை கெளதமி

நடிகர் கமல் மற்றும் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து, கமலின் தோழியான கௌதமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய கௌதமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 
சமீபத்தில் நடிகர் கமல் மற்றும் ரஜினி அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார்கள். இந்நிலையில் இந்த தலைமுறையில்  அரசியலுக்கு யார் வந்தால் சரியாக இருக்குமோ, அவருக்குதான் ஆதரவு தரவேண்டும் என நடிகை கௌதமி கருத்து  தெரிவித்துள்ளார். மேலும் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட முடிவு. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். யார் என்ன கருத்தோடு வருகிறார், அதனை எப்படி நிறைவேற்றுவார்கள், என்பதுதான் முக்கியம். இதில் யார் எவர் என்ற  தனிப்பட்ட விருப்பம் எதுவும் முக்கியமில்லை என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில் கமல் மற்றும் கெளதமி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், கமலின் அரசியல் வருகைக்கு ஆதரவாக கருத்து  கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.