திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Snoj
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:08 IST)

’ஹிட்’ பட இயக்குநருடன் மீண்டும் கைகோர்த்த அதர்வா

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அதர்வா மற்றும் இயக்குநர்  சாம் ஆண்டன் ஆகிய இருவரும் மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

2019 ஆம் ஆண்டு மே மாதம் ரிலீசாகி வெற்றி பெற்ற படம் ’100’. இப்படத்தை சாம் ஆண்டன் இயக்கினார். நடிகர் அதர்வா ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படத்தில் அதர்வாவுட, ஹன்சியா, ராதாரவி மற்றும் ராஜ் ஐயப்பா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் அனைவரின் நடிப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலும் குவித்தது.

இந்நிலையில், சாம் ஆண்டன் தற்போது அதர்வா நடிப்பில் மற்றொரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படம் முழு ஆக்சமாக உருவாகவுள்ளதாக இதற்கான ஷூட்டிங் ஏற்பாடுகள் ஐதாபாத்தில் ஒருகட்டமாக விரையில் தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும், இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவாளரகப் பணியாற்றவுள்ளார்.