இனிமே நோ சீரியல்… ஒன்லி சினிமாதான் – அதிரடி முடிவெடுத்த நடிகை!
நடிகை வித்யா பிரதீப் சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்திவந்த நிலையில் இப்போது முழு மூச்சாக சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
தனுஷின் மாரி-2, தடம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் எக்கோ என்ற படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நாயகி தொடர் மூலமாக பிரபலமான இவர் சினிமா, சீரியல் என இரண்டு திரைகளிலும் கவனம் செலுத்திவந்தார். ஆனால் இப்போது அதிரடி முடிவாக இனிமேல் சீரியல்களில் நடிப்பதை விட்டுவிட்டு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.