வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2017 (09:48 IST)

திரையுலகில் பாலியல் வன்மங்கள் குறித்து நடிகை தமன்னா ஓபன் டாக்

நடிகை தமன்னா திரையுலகில் பாலியல் வன்மங்கள் நடப்பதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து தமன்னா அளித்த பேட்டி  ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

 
சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பது உண்மைதான். மற்ற நடிகைகள் சொல்லித்தான் இது எனக்கு தெரிந்தது. ஆனால் எனது வாழ்க்கையில் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் வழியை  பொறுத்துத்தான் நல்லதும் கெட்டதும் வருகின்றன என்று கூறியுள்ளார்.
 
2005ம் ஆண்டு தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் அறிமுகமானேன். 12 வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன்.  சினிமாவுக்கு வந்ததிலிருந்து இப்போதுவரை என்னை யாரும் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்ததில்லை. நடிகைகளுக்கு  பாலியல் தொல்லைகள் தென்னிந்திய படங்களில் மட்டுமன்றி இந்தி திரையுலகிலும் இருக்கிறது என்பதனை சில நடிகைகள் சொல்லி தெரிந்து கொண்டேன். சிலர் உண்மையை சொன்னாலும் பலர் உண்மையை சொல்வதில்லை என்பதுதான் உண்மை.
இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.