செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (16:36 IST)

சினிமாவில் அப்படி இப்படி இருந்தாலும் நிஜத்தில் இப்படிதான்: நடிகை தமன்னா!

நடிகை தமன்னா இன்று தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் பெறும் முன்ணனி ஹீரோயின். சினிமாவில் கவர்ச்சி தேவைப்படும்  இடங்களில் நடித்து கொடுப்பவர் தமன்னா. இதனால் அவரை கவர்ச்சி நடிகையாகவே பார்க்கின்றனர்.



பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் தமன்னாவுக்காகவே கூடுதல் கிளாமர் சீன்கள் வைக்கிறார்களாம். நிஜ வாழ்க்கையில் குடும்ப பெண் போல தான்  உடையணிய தமன்னா விரும்புவாராம்.
 
சில சமயங்களில் மாடர்ன் உடையில் வந்தாலும் மற்றவர்கள் மதிப்பு கொடுக்கும் வகையில் இருக்கவேண்டும் என்று தான்  விரும்புகிறேன். எதிர்காலத்தில் ‘பாகுபலி’ அவந்திகா கேரக்டர் போன்று தனது தனித்திறமையை வெளிப்படுத்த  ஆசைப்படுகிறாராம். அதனால், தனது அபிமான டைரக்டர்களிடம் தன்னை மாறுபட்ட வேடங்களில் நடிக்க வைக்குமாறு  வலியுறுத்தி வருகிறார் நடிகை தமன்னா.