செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheeesh
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (10:42 IST)

குத்தாட்டம் போட ரூ.65 லட்சம் வாங்கிய நடிகை: அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகன் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கேத்ரீன் தெரஸா ரூ.65 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.


 

 
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் மகன் ஸ்ரீனிவாஸ் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு கேத்ரீன் தெரஸா ஆடுகிறார். இதற்காக அவருக்கு ரூ.65 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறதாம். கேத்ரீன் தெரஸாவுக்கு ஒரு படத்துக்கே இவ்வளவு சம்பளம் இல்லாத நிலையில் ஒரு பாடலுக்கு இவ்வளவு பெரிய சம்பளம் வாங்கியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பாக பரவி வருகிறது.
 
இதேபோல் தமன்னா ஒரு பாடலுக்கு அதிக தொகை வாங்கியது குறிப்பிடத்தக்கது.