வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (16:33 IST)

ஷூட்டிங்கில் நடிகை சமந்தாவை கடித்த முயல்!

''சாகுந்தலம் ''படப்பிடிப்பின்போது தன்னை ஒரு முயல் கடித்துவிட்டது என்று சமந்தா கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது, காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சகுந்தலம் படம் 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ளதா.  இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை சமந்தா கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் இப்படப்பின் போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை சமந்தா பகிர்ந்துள்ளார். அதில். ’’எனக்கு மலர்கள் என்றால் அலர்ஜி. நான் சகுந்தலையாக நடித்தபோது, மலர் மாலைகளைப் போட்டுக் கொண்டதால், உடலில் தழும்புகள் ஏற்பட்டன.  அவை தெரியாமல் இருக்க மேக்கப் செய்தேன்.  பின்னர், படப்பிடிப்பின்போது என்னை ஒரு முயல் கடித்துவிட்டது…அதன்பின்னர் அந்த முயல் எனக்குப் பிடிக்கவில்லை’’ என்று கூறினார்.

மேலும், ’’தமிழ். இந்தி  மற்றும்  தெலுங்கில் இயக்குனர் கேட்டுக்கொண்டதால் என் சொந்தக் குரலில் டப்பிங் பேசினேன்’’ என்று கூறியுள்ளார்.