ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:23 IST)

தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டி புரமோஷன் செய்த நடிகை: வைரல் புகைப்படம்

manjakuruvi
தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டி புரமோஷன் செய்த நடிகை: வைரல் புகைப்படம்
ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகை அந்த படத்தின் புரமோஷனுக்கு வரமுடியாது என்று சொல்லும் காலத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகை தெருவில் இறங்கி தான் நடித்த படத்தின் போஸ்டரை ஒட்டிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
’மஞ்ச குருவி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை நீரஜா. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக சாலையில் இறங்கி நீரஜா போஸ்டர் ஒட்டினார்.
 
அப்போது நீங்கள் ஏன் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று ஒரு நபர் கேள்வி கேட்டபோது நான் தான் இந்த படத்தின் கதாநாயகி என்றும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நானே இறங்கி போஸ்டர் ஒட்டி புரமோஷன் செய்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஒரு படத்தில் நடித்த நாயகியே தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டி புரமோஷன் செய்வது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva