1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (15:07 IST)

சந்திரமுகியாக நடிக்கப் போவது இந்த நடிகைதான்… பட்ஜெட் தாங்குமா?

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் ராதிகா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில் கதாநாயகி யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

இரண்டாம் பாகம் முற்றிலும் வேறு கதை என்றாலும் முதல் பாகத்தில் இருந்து முருகேசன் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சந்திரமுகியாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதில் கங்கனா ரனாவத்தான் சந்திரமுகி வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

பிளாஷ்பேக்கில் இடம்பெறும் காட்சிகளில் கங்கனா விரைவில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கங்கனாவின் சம்பளம் அதிகம் என்பதால் இந்த படத்தின் பட்ஜெட் தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.