திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 3 மே 2018 (10:01 IST)

கழுத்தில் மலைப்பாம்புடன் தமிழ் நடிகை(வைரலாகும் வீடியோ)

நடிகை வேதிகா தன் கழுத்தில் மலைப்பாம்புடன் உள்ள போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு அர்ஜீன் நடிப்பில் வெளியான மதராசி திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை வேதிகா. பின் முனி, காளை, சக்கரக்கட்டி, காவியத் தலைவன், பரதேசி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
தற்பொழுது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார் வேதிகா. தற்போது அவர் கைவசம் ‘காஞ்சனா 3’, ‘ஹோம் மினிஸ்டர்’, ‘கொழிதன் கச்சன்’ என 3 படங்கள் உள்ளன. 
இந்நிலையில் நடிகை வேதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் ஒரு பாம்பை பயமில்லாமல் கையில் வைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.அவரது தைரியத்தை பலர் பாராட்டி வருகின்றனர். வீடியோவைக் காண ‘FeelingAdventurous’ ஐ கிளிக் செய்யவும்