1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Kamalhaasan speech about tamil and kannada made condemns in Karnataka

தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது… தக் லைஃப் ப்ரமோஷனில் கமல் பேச்சு – கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பு!

சிம்பு
1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. தற்போது படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகாவில் நடந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் “இந்த நிகழ்ச்சிக்கு சிவராஜ்குமார் வந்திருக்கிறார். அவர் கர்நாடகாவில் இருக்கும் என்னுடைய குடும்பம்.  அதனால்தான் என் பேச்சைத் தொடங்கும்போது தமிழில் பேசினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.” எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற கமல்ஹாசனின் கருத்தை எதிர்த்து கர்நாடகாவைச் சேர்ந்த சில அரசியல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  அதே போல சமூகவலைதளங்களிலும் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
கார்த்தி நடிப்பில் டாணாக்காரன் தமிழ் இயக்கும் படத்தின் தலைப்பு இதுதானா?