நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா: அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. மேலும் சமீபத்தில் தயாரிப்பாளர் சுவாமிநாதன் உள்பட ஒருசில கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வாரமே தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தனது வயதை கணக்கில் கொண்டு தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும், அதனையடுத்து தான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்
சுகாதாரத்துறை அதிகாரிகள் தினசரி வந்து தனக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் சிகிச்சையை செய்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் கூறியுள்ளார். இந்த ஒரு வாரத்தில் தன்னுடைய உடல் நலம் சற்று முன்னேறி இருப்பதாகவும் இதில் இருந்து மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்