உச்சகட்ட படுக்கை காட்சியில் நடித்துவிட்டு சின்ன பசங்களுக்கு அட்வைஸ் கொடுத்த மிருணாள் தாகூர்!
மஹாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவரான நடிகை மிருணாள் தாகூர் இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் தமிழ் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி தொடரின் நடித்து பெருவாரியான மக்கள் மனதை கவர்ந்தார். குங்கும் பாக்யா இந்தி ரிமேக் சீரியலான இனிய இருமலர்கள் தொடரில் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
2018ல் லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமான மிருணாள் 2019 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களான சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சில தோல்வி படங்களை சந்தித்த இவர் தெலுங்கு காதல் நாடகத் திரைப்படமான சீதா ராமம் படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
அந்த திரைப்படத்தில் துகள் சல்மானுக்கு ஜோடியாக நடித்து வெற்றியைப் பெற்றார். இதையடுத்து தற்போது இவர் தெலுங்கு சினிமா நடிகர் நானியின் 30வது படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சீதா ராமம் படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வாங்கிய மிருணாள் தாகூர் தற்போது ரூ. 6 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.
தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் பாலியல் உறவை வெளிப்படுத்தும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் தமன்னாவுடன் நடித்திருக்கிறார். இது குறித்து பேசியுள்ள மிருனாள், " செக்ஸ் மற்றும் காமத்தைப் பற்றி முதிர்ச்சியடைந்த உரையாடல் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். மேலும், சின்ன பசங்களுக்கு காமத்தை குறித்து சொல்லி கொடுக்க வேண்டும். இதனால் தவறான தகவல் மற்றும் பழக்கத்தில் இருந்து வெளிவர முடியும் என்று கூறியுள்ளார்.