1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 1 ஜூலை 2023 (17:53 IST)

என் குடும்பத்தோடு பார்க்க அசிங்கமா இருக்கு... லஸ்ட் ஸ்டோரீஸ் 2 குறித்து தமன்னா வேதனை!

பாலிவுட்டில் மிகவும் பிரசித்திபெற்ற வெப் தொடரான லஸ்ட் ஸ்டோரீஸ் பாலியல் உறவு குறித்த இந்திய பெண்களின் புரிதலை 4 கோணங்களில் இருந்து சொல்லும் வகையில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இதன் முதல் பாடம் "லஸ்ட் ஸ்டோரீஸ்" தொடரில் கியரா அத்வானி , விக்கி கௌஷல் இணைந்து நடித்திருந்தனர். 
 
அதையடுத்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடர் நாளை நெட்பிலிக்சில் வெளியாகிறது. இந்த படத்தில், மிருணாள் தாகூர், கஜோல், தமன்னா, விஜய் வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான இந்த தொடர் நெட்பிளிக்ட்ஸில் வெளியாக மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இப்படம் குறித்து பேசியுள்ள நடிகை தமன்னா, நான் என் குடும்பத்துடன் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடர் பார்க்க மிகவும் சிரமப்பட்டேன். மேலும், படபடப்புடன் அசவுகரியமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆனால், நான் ஒரு கலைஞனாக அதில் நடித்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் ரசிகர்கள் நீங்களும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடர் பார்க்கும் போது எந்த தயக்கமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.