திருமணம் நிச்சயமான நடிகைக்கு திடீர் குழப்பம் – கொரோனா எதிரொலி!
நடிகை மியா ஜார்ஜ் தன்னுடைய திருமணத்தை எப்போது நடத்துவது என்ற குழப்பத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மலையாள நடிகை மியா ஜார்ஜ் தமிழில் அமரகாவியம் மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து அவருக்கு கேரளாவைச் சேர்ந்த அஸ்வின் பிலிப் என்பவரோடு திருமணம் நிச்சயமானது. அவர்கள் திருமணத்தை நடத்த இருந்த நிலையில் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தனது திருமணம் குறித்து கூறியுள்ள மியா ஜார்ஜ் ‘கொரோனா முடிந்தவுடன் அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாக திருமணம் நடத்துவதா அல்லது இப்போதே எளிமையாக நடத்துவதா என்ற குழப்பத்தில் இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.