செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 8 ஆகஸ்ட் 2020 (16:37 IST)

தரமற்ற தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம் வந்துவிட்டது - மீராவுக்கு கங்கணம் கட்டிய நடிகை!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக திரையுலக நட்சத்திரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வருகிறார்.அதிலும் குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா இருவரையும் மோசமாக விமர்சித்தது சமூகவலைதளத்தில் கொதிநிலையை உருவாக்கியது.

இதனால் கோபமான அவ்விரு நடிகர்களின் ரசிகர்கள் மீராவை ஆபாச வார்த்தையால் திட்டுவதாகவும், இனிமேல் என்னை ஆபாசமாக பேசினால் ‘நானும் பதிலுக்கு ஜோதிகா மற்றும் சங்கீதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவேன் என சில ஆபாசமான வார்த்தைகளை சொல்லி வெளிப்படையாக வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து மீரா மிதுன் அத்துமீறிய பேச்சுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு திரைப்பிரபலங்களும் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர், அந்தவகையில் தற்ப்போது பிரபல காமெடி நடிகை ஆரத்தி தனது ட்விட்டருக்கு விஜய், சூர்யா குறித்தும் அவர்களது மனைவிகளை குறித்தும் அவதூறு பேசிய மீரா மிதுனை கண்டித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "மென்மையான குடும்பத்தலைவி சங்கீதா அக்கா,
நடிகையாக இருப்பினும் ஜோ..தீ என்று எல்லா மக்களுக்கும் தெரியும்... தரமற்ற தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம் வந்துவிட்டது... வன்மையாக கண்டிக்கிறேன். பெண் இனத்தின் வெட்கக்கேடு, இதெல்லாம் மாதர் சங்கம் காதில் கேக்கலையா??" என்று பதிவிட்டு கொந்தளித்துள்ளார்.