செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 8 ஆகஸ்ட் 2020 (15:09 IST)

நடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ25 லட்சம் நிதியுதவி!

தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்றான சிவகுமார் குடும்பத்தில் சூர்யா, ஜோதிகா , கார்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். இந்த குடும்பம் படத்தில் நடிப்பது மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டு சமூகத்திற்கு தேவையான பல உதவிகளை முன் வந்து செய்பவர்கள்.

அதன் ஒரு பகுதியாக பார்க்கப்படுவது தான் "அகரம் அறக்கட்டளை ". கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகாவிற்கு JFW சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள் அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையாகி ஆளாளுக்கு ஜோதிகாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்ப்போது நடிகை ஜோதிகா தான் பார்வையிட்ட தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ.  25 லட்ச ரூபாய் நிதி உதவியை அகரம் அறக்கட்டளை முலம் வழங்கியுள்ளார். இது குறித்து  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ், தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி என்றார்.