வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (17:50 IST)

ட்ரைலரை பார்த்தால் உடம்பெல்லாம் சிலிர்த்துபோய்டும் - மாளவிகா மோகனன்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்றுள்ளது. மேலும், விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் ட்ரைலர் அல்லது டீசர் வெளியாகலாம் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் மாஸ்டர் பட ட்ரைலர் குறித்து கேட்டபோது  " இசை வெளியிட்டு விழாவின் அடுத்த நாளில் ஆபீசுக்கு சென்று மாஸ்டர் ட்ரைலரை பார்த்தேன். புல் மாஸ், கண்டிப்பாக ட்ரைலரை பார்த்தால் சிலிர்த்து விடுவீர்கள் என்று கூறி தளபதி ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்திவிட்டார். இதே போல் படத்தில் நெகடீவ் ரோலில் நடித்திருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ்,  ட்ரெய்லரை கிட்டத்தட்ட 6 முறை பார்த்துவிட்டதாகவும், வ்வளவு தாமதமாக வந்தாலும் காத்திருக்கும் தளபதி ரசிகர்களுக்கு worth ஆனதாக இருக்கும் என சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.