வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (12:26 IST)

பிகில் 20 கோடி நஷ்டமா? பதில் கூறிய தயாரிப்பாளர்!

பிகில் படத்தின் மூலம் தயாரிப்பாளர்களுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் வந்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு தயாரிப்பு நிர்வாகி அர்ச்சனா கல்பாத்தி பதிலளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது. ஆனாலும் வசூல் மழையில் நனைந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கிட்டதட்ட 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ஆனதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் தயாரிப்புத் தரப்போ தங்களுக்கு படத்தைத் தயாரித்ததில் 20 கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்கு காட்டுகிறதாம். இது விஜய் ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இது சம்மந்தமாக சில இணையதளங்களில் செய்தி வெளியானது.

ஆனால் அந்த தகவலில் உண்மையில்லை என தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக விஜய் ரசிகர்கள் என்ற டிவிட்டர் பக்கத்தில் ‘அர்ச்சனா கல்பாத்தி அந்த செய்தி உண்மையில்லை என மறுத்துள்ளார். அவர் அதுபோன்ற எந்த வொரு நேர்காணலும் கொடுக்கவில்லை.’ எனக் கூறியிருந்ததை பகிர்ந்துள்ளார். மேலும், அதில் ’உண்மை.’ எனத் தெரிவித்துள்ளார்.