திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2023 (09:29 IST)

ஆஸ்கர் வாங்கலைன்னாலும் வழங்குவோம்..! – தீபிகா படுகோனுக்கு கிடைத்த கௌரவம்!

அமெரிக்காவில் நடைபெற உள்ள 95வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வழங்க உள்ளோர் பட்டியலில் தீபிகா படுகோன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் விருது ஆஸ்கர். அமெரிக்காவில் வழங்கப்படும் இந்த விருதை பெற பல நாட்டு திரைப்படங்களும், திரைக் கலைஞர்களும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழா மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பரிந்துரை படங்களின் பட்டியல் முன்னதாக வெளியான நிலையில் சிறந்த பாடலுக்கான பரிந்துரையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலும் உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள இந்த ஆஸ்கர் விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழாவில் விருது வெல்லும் படங்கள், திரைக்கலைஞர்களுக்கு விருதை வழங்க சில முக்கியமான திரை ஆளுமைகள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகின்றனர். அந்த சிறப்பு விருது வழங்குவோர் பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் இடம்பெற்றுள்ளார். ட்வைன் ஜான்சன், ஜோ சல்டனா, டோனி யென் போன்ற பிரபல ஆளுமைகளுடன் தீபிகா படுகோன் பெயரும் இடம்பெற்றுள்ளது ட்ரெண்டாகியுள்ளது. இதுகுறித்து தீபிகா படுகோனும் இன்ஸ்டாகிராமில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Edit by Prasanth.K