பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் ‘ப்ராஜக்ட் கே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தீபிகா படுகோன் ,பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கும் ப்ராஜக்ட் கே என்ற திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.
பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துவரும் 21 வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வரும் நிலையில் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.