திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (16:25 IST)

பிரபல நடிகர் மீது நடிகை புகார்...போலீஸார் கைது

கணவர் தன்னைத் தாக்கியதாக நடிகை நிஷா ராவல் புகார் கொடுத்ததை அடுத்து பிரபல நடிகரை போலீஸார் கைது செய்தனர்.

இந்தி சினிமாவில் பிரபல நடிகர் கரண் மெஹ்ரா. இவர் லவ் ஸ்டோரி 2050, பிளடி இஸ்க், பஸ்தி ஹே சஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் நிறைய தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை நிஷா ராவலை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே நடிகர் கரண் மெஹ்ராவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது வாக்குவாதம் முற்றி அது பிரச்சனையாக உருவெடுக்கவே கணவர் தாக்கியதாக நிஷா ராவல் காவல்துறையில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் கரண் மெஹ்ராவை கைது செய்தனர். இந்தச் சம்வவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.