திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 27 மே 2021 (07:44 IST)

PSBB முதல்வர், தாளாளர் பதிலில் போலீஸார் அதிருப்தி: விசாரணை வளையத்தில் மேலும் 3 ஆசிரியர்கள்

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆகிய இருவரையும் நேற்று போலீசார் விசாரணை செய்தனர் 
இந்த விசாரணையில் இருவரும் கூறிய பதில் போலீசாருக்கு திருப்தி இல்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியது தொடர்பாக ஏற்கனவே பலமுறை புகார் அளிக்கப்படும் நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு முதல்வர் மற்றும் தாளாளர் சரியான பதிலை சொல்லவில்லை என விசாரணை அதிகாரிகளிடம் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
முதல்வர் மற்றும் தாளாளர் சரியாக பதில் அளிக்காததால் அதிருப்தி அடைந்த போலீசார் பாலியல் விவகாரத்தில் மேலும் சில ஆசிரியர்களை விசாரணை செய்ய இருப்பதாகவும் குறிப்பாக மூன்று ஆசிரியர்கள் விசாரணை வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் மீது போலீசார் பிடி இறுகுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது