1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2020 (17:45 IST)

ஆடிஷன்னு கூப்டு தப்பா நடந்துகிட்டா? பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ!

பிரபல மலையாள நடிகையான அண்ணா பென்னுடன் கேரள நடிகர் சங்கத்துடன் இணைந்து  விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சினிமா மோகம் இருப்பவர்களை தவறாகப் பயன்படுத்திக் கொள்ள என்றே மோசடிக் கும்பல்கள் உள்ளன. சினிமாவில் நடிக்க ஆசையா என விளம்பரம் கொடுத்து படத்தில் நடிக்க பணம் கொடுக்கவேண்டும் என சொல்லியும் பெண்கள் என்றால் அவர்களிடம் ஆடிஷன் என்ற பெயரில் தவறாக நடந்துகொள்வதும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

இந்நிலையில் அதுமாதிரி யாரும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக மலையாள சினிமா நடிகையான அண்ணா பென் கேரள திரைத்துறை அமைப்பான ஃபெஃப்காவுடன் இணைந்து ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஆடிஷன் என்ற பெயரில் தனியாக அழைத்து யாராவது பாலியல் ரீதியாக அத்துமீறுபவர்களை பற்றி புகாரளிக்க 984 634 2226 மற்றும் 964 534 2226 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். அந்த விழிப்புணர்வு திரைப்படம் இப்போது வைரலாக பரவி வருகிறது.