வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 4 ஜூலை 2020 (17:39 IST)

சினிமாவுக்கு டாட்டா... சீரியலுக்குள் நுழைந்த பிரபல காமெடி நடிகர்

நம்ம தமிழ் சினிமாவில் கவுண்டமனி மாதிரி தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் பிரேமானந்தம். இவர் முன்னணி சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இனிமேல் பிரேமானந்தா சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் சின்னத்திரையில் நாடகங்கள் பக்கம் கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகிறது.

இந்தச் செய்தியைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகவும் அப்செட் ஆகியுள்ளனர். ஏனென்றால் தனது ரசிகர்களை மட்டுமல்லாம் டோலிவுட்டையே தனது ஜனரஞ்சமான காமெடியில் கலக்கிக் கொண்டிருப்பவர்  சினிமாவை விட்டு சின்னத்திரையில் கால் எடுத்து வைப்பது அதிர்ச்சியாகவுள்ளது என பலரும்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.