1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (12:04 IST)

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் வீடியோ!

aiswarya rajesh1
பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் வீடியோ!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தருவார்கள் என்பதும் அந்த வகையில் நேற்று ஷிவின், மைனா ஆகியோர்களின் உறவினர்கள் வருகை தந்தார்கள்.
 
இந்த நிலையில் இன்று காலை முதல் புரமோவில் ரக்சிதாவின் உறவினர்கள் வருகை தந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் மணிகண்டனின் உறவினர்கள் வருகை தந்துள்ளனர்.
 
மணிகண்டனின் அம்மா மனைவி மற்றும் மகன் வந்துள்ள நிலையில் மணிகண்டனின் சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷ் வந்துள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran