பிக்பாஸ் நாமினேஷன்.. ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் தப்பித்த ஆச்சரியம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் 8 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது கேப்டன் அமுதவாணன் உள்பட 9 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் கேப்டனையும் நாமினேஷன் செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்ததை அடுத்து நேற்று நாமினேஷன் நடைபெற்றது
இதில் ரக்சிதா தவிர அனைவரும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் நாம் இவர் செய்யப்பட்ட ஏடிகேன், அமுதவாணன், அசீம், ஷிவின், மணிகண்டன், மைனா நந்தினி, விக்ரமன், கதிரவன் ஆகிய 8 பேர்களில் யார் வெளியேறுவார்கள் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும் என்பது குறிப்பிடதக்கது. அனேகமாக இந்த வாரம் கதிரவன் அல்லது மைனா வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
Edited by Siva