திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:38 IST)

மீண்டும் சமந்தா ரூபத்திற்கு மாறிய ஆத்மீகா - அடிச்சு நொறுக்கும் லைக்ஸ்!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.

ஆத்மீகா ஒரு சாயலில் சமந்தாவை போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் லோ படஜெட் சமந்தா என்று  ஷேர் செய்து வைரலாக்கினர் நெட்டிசன்ஸ். இந்நிலையில் அதே போன்றே தற்ப்போது படுக்கையறையில் அமர்ந்து அலங்கோலமாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு சமந்தாவை போன்று இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.