கணவர் கொடுத்த உம்மா... நஸ்ரியா வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படம்!
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து உச்ச நடிகைகளாகவும் இளைஞர்களின் கனவுகன்னியாகவும் வலம் வந்த நயன்தாரா, அமலா பால், சாய்பல்லவி போன்றவர்களை தொடர்ந்து முக்கிய இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா.
தமிழில் நேரம் , ராஜா ராணி போன்ற படங்களில் கியூட்டான எஸ்பிரேஷன்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார். இதற்கிடையில் மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகும் ஒருசில படங்களில் நடித்து வரும் நஸ்ரியா தொடர்ந்து கணவருடன் லவ்தீக வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார். அதை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது கணவருடன் எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்ப்போது தனது இன்ஸ்டாவில் கணவர் கட்டியணைத்து முத்தமிட்ட கியூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.