திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (11:42 IST)

கேரள நிதி! என் பெயரை பயன்படுத்தாதீங்க! நடிகை ஆவேசம்

மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிதி திரட்ட என் பெயரை பயன்படுத்தாதீர்கள் என தெலுங்கு நடிகை மெஹ்ரீன் காட்டமாக கூறியுள்ளார்.

 
கேரளாவில் 100 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துவருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த 3 தினங்களில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி 164 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 320க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கேரளாவை சீரமைத்து  பழைய நிலைக்கு கொண்டுவர நிதியுதவி திரட்டப்படுகிறது.
 
இதனிடையே தெலுங்கு நடிகை மெஹ்ரீனின் ரசிகர்கள் பக்கம் சமூக வலைதளங்களில் கேரளவிற்கு உதவ முன் வாருங்கள் என்று பதிவிட்டிருந்தனர். அதற்கு மெஹ்ரீன் உதவ வேண்டும் என்றால் அவர்களாகவே முன் வரட்டும் என் பெயரை பயன்படுத்தி பணம் திரட்டாதீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.