இந்திய அணி பயிற்சியாளரை மாற்றுங்கள் - ரசிகர்கள் போர்க்கொடி!

Last Modified வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (20:00 IST)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய கிரிக்கெட் அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 0-2 என்ற நிலையில் தொடரில் பின்தங்கி உள்ளது.
இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்தில் அதன் திறமை மற்றும் அனுபவத்துக்குகேற்ப விளையாடவில்லை என்ற போதிலும், இனிவரும் போட்டிகளில் இந்திய அணி வெல்லும்பட்சத்தில் தொடரின் போக்கு மாறக்கூடும். 
 
இதனிடையே இந்த தோல்விக்கு காரணமாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை குற்றம் சாட்டி சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் சாஸ்திரிக்கு பதில் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :