வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 14 ஏப்ரல் 2021 (20:30 IST)

கடை திறப்பு விழாவுக்குச் சென்ற நடிகர்...கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

ஒரு கடைத் திறப்புவிழாவிற்கு சென்ற குக் வித் கோமாளி புகழைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடினர். இதனால் கடைக்கு சீழ் வைக்கப்பட்டது.
 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்கள் திறமையின் மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

சமீபத்தில் புகழ், ஷிவாங்கி , பவித்ரா தர்ஷா உள்ளிட்டோர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு கடைத் திறப்புவிழாவிற்கு சென்ற குக் வித் கோமாளி புகழைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடினர். இதனால் கடைக்கு சீழ் வைக்கப்பட்டது.

திருநெல்வேலி அருகே வண்ணாரப்பேட்டையில் ஒரு செல்போன் கடையின் திறப்பு விழாவிற்கு வந்து கடையைத் திற்ந்துவைக்க  குக் வித் கோமாளி புகழுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரைப் பார்க்க  ரசிகர்கள் கூட்டம் கூடியதால் கொரொனா விதிமுறைகளை மீறியதாக அக்கடைகு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.