நடிகர் விஜய் காவி வேஷ்டி, ’அதைப் பற்றி ’ கேட்க வேண்டாம் : எஸ்.ஏ.சந்திரசேகர் கோபம்

vijay
Last Modified வெள்ளி, 28 ஜூன் 2019 (17:14 IST)
தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.  அன்று எஸ்.ஏ.சி யின் மகன் விஜய் என்று சொன்னது போய், இன்று நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி என்று பேர் புகழ் சம்பாதித்து விட்டார் விஜய். 
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு படவிழாவில் பேசிய  எஸ்.ஏ.சி சந்திரசேகர் : இனிநாம் எல்லாம் காவி வேஷ்டி கட்டிக்கொள்ள வேண்டியதுதான், தமிழகம் தவிர மற்ற மாநிலத்தவர்கள் அனைவரும் தவறு செய்துவிட்டார்கள் என்று தெரிவித்திருந்தார் இது பலத்த சர்ச்சைகளை உண்டாக்கியது.
 
இந்நிலையில் தற்பொழுது கேப்மாரி என்ற படத்தை இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதில் ஜெய், அதுல்யா ரவி ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். இப்படத்தின் அறிமுகவிழாவில் சந்திரசேகர் கூறியதாவது : இளைஞர்களை மனதில் வைத்தே இப்படத்தை எடுக்கவுள்ளதாகவும், இது நான் இயக்கும் கடைசி படம் என்று உருக்கமாகப் பேசினார்.
 
இதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, பிகில் படத்தில் நடிகர் விஜய் காவி வேஷ்டி அணிந்துள்ளாரே என்று அவரிடம் கேள்வி  எழுப்பினர்.
 
சந்திரசேகர் ; என்பட விசயம் சம்பந்தமாக மட்டுமே என்னிடம் கேளுங்கள்.. அதற்கு நான் பதில் அளிக்கிறேன். நடிகர் காவி வேஷ்டி கட்டியிருந்தால் அதை அவரிடம் கேளுங்கள்.. என்று கோபமாக பேசியதாகத் தகவல்கள் வெளியாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :