உங்களுக்கு இரண்டே இரண்டு சாய்ஸ் தான்: நடிகை வரலட்சுமி எச்சரிக்கை
கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கூறப்படும் நிலையில் திரையுலக பிரமுகர்கள் பலர் தங்கள் ட்விட்டர் இணைய தளங்களில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
முதலில் கொரோனா வைரஸ் நமக்கு வராது என்று சிலர் அசட்டு தைரியத்தில் உள்ளனர். அதை முதலில் மறந்துவிடுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் கொரோனா வைரஸ் வரலாம். இதனை புரிந்து கொள்ளுங்கள்
அடுத்ததாக வெளியில் யாரும் சுற்ற வேண்டாம். கடந்த 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவின்போது 27% பேர் மட்டும்தான் வீட்டில் இருந்தனர். மீதி அனைவரும் வெளியே தான் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இதன் ஆபத்து யாருக்கும் இன்னும் புரியவில்லை.
சமீபத்தில் ‘Contagion’ என்ற ஒரு படம் வந்தது. அந்த படத்தை அனைவரும் தயவு செய்து பாருங்கள். அதில் வைரஸின் கொடூரம் குறித்தும், அது எவ்வாறு பரவுகிறது என்பது குறித்தும் விளக்கபப்ட்டிருக்கும். அதன் பிறகாவது தயவு செய்து திருந்துங்கள்
கொரோனா வைரஸ் குறித்து யாரும் பயப்படவேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்குரிய கடைகள் அனைத்தும் திறந்து தான் இருக்கின்றது. எனவே அவசர அவசரமாக எல்லா பொருளையும் வாங்கி வீட்டில் குவிக்க வேண்டாம். கடைகள் திறந்திருக்கும் என்று அரசே கூறியுள்ளது. எனவே யாரும் பயப்பட வேண்டாம். இந்த ஒரு வாரம் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் போது
நமக்கு இப்போது இரண்டே இரண்டு சாய்ஸ்தான். அதில் ஒன்று எல்லோரும் வெளியில் நன்றாக சுற்றிவிட்டு இந்தியா முழுவதும் கொரோனா வைரசை பரப்பி, எண்ணவே முடியாத அளவுக்கு உயிரிழப்புகளை உருவாக்குவது. இன்னொன்று ஒரே ஒரு மாதம் வீட்டில் உட்கார்ந்து கொரோனாவில் இருந்து தப்புவது. நீங்கள் எந்த சாய்ஸை தேர்வு செய்வீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்
இவ்வாறு நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்