1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (17:34 IST)

நிறுத்தப்படும் ஓலா, ஊபர் சேவைகள்: எங்கெங்கு தெரியுமா??

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களை ஓலா, ஊபர் தனது சேவையை நிறுத்த முடிவெடுத்துள்ளது. 
 
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,138 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 3,91,947ஆக உயர்ந்த நிலையில் 1,02,843 பேர் குணமடைந்துள்ளனர். 
 
பல லட்சம் மக்கள் உலகம் முழுவதும் பாதித்துள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு அமலானது. 
 
அதற்கு முன்பே பல மாநிலங்கள் 144 தடை உத்தரவை செயல்படுத்தியிருந்த நிலையில், மக்கள் ஊரடங்கை தொடர்ந்து டெல்லி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அதை 144 தடையாக நீட்டித்துள்ளன. தமிழகத்திலும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. 
 
இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாநிலங்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மிசோரம், சிக்கிம் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதனோடு மத்திய அரசு 75 மாவட்டங்களை தனிப்படுத்தும்படி அறிவுறுத்தியது. இதில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் அடக்கம். இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களை ஓலா, ஊபர் தனது சேவையை நிறுத்த முடிவெடுத்துள்ளது. மருத்துவ சேவைகளுக்காக மட்டும் குறைந்த எண்ணிக்கையில் டாக்சி இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.