‘மாரி 2’ பட நடிகருக்கு ஏற்பட்ட விபத்து: ஐசியூவில் அனுமதி!
‘மாரி 2’ பட நடிகருக்கு ஏற்பட்ட விபத்து: ஐசியூவில் அனுமதி!
தனுஷ் நடித்த ‘மாரி 2’ உள்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் மலையாள திரையுலகில் பிரபல ஹீரோவான நடிகர் டொவினோ தாமஸ்க்கு இன்று ஏற்பட்ட விபத்து காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். இவர் இன்று ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக டொவினோவுக்கு படுகாயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த டொவினோவை படக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலில் முதலுதவி சிகிச்சை செய்த மருத்துவர்கள் பின்னர் அவருக்கு ஏற்பட்ட படுகாயம் காரணமாக உடனடியாக ஐசியூவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நடிகர் டொவினோக்கு காயம் என்ற தகவல் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.