செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (14:44 IST)

மறைந்த தயாரிப்பாளரின் குடும்பத்திற்கு சிம்பு-தனுஷ் உதவுகிறார்களா?

மறைந்த தயாரிப்பாளரின் குடும்பத்திற்கு சிம்பு-தனுஷ் உதவுகிறார்களா?
சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிம்பு நடித்த ’மன்மதன்’ மற்றும் தனுஷ் நடித்த ’திருடா திருடி’ ஆகிய இரண்டு படங்களுமே சிம்பு, தனுஷ் ஆகிய இருவருக்கும் திருப்புமுனையை கொடுத்த படங்கள் என்பதும், இந்த இரண்டு படங்களையும் தயாரித்தவர் கிருஷ்ணகாந்த் என்பதும் குறிப்பிடதக்கது 
 
இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அதன் பின் அவர் தயாரித்த திரைப்படங்கள் நஷ்டத்தை கொடுத்ததால் கடைசி நேரத்தில் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்ததாக கூறப்படுகிறது
 
குறிப்பாக அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது மருத்துவமனையில் அவரை சேர்த்ததாகவும் மருத்துவமனை பில் கட்ட கூட அவரது குடும்பத்தினரிடம் பணம் இல்லை என்றும் அதன்பிறகு அவருடைய நண்பர்கள்தான் மருத்துவமனைக்கு பணம் கொடுத்ததோடு இறுதிச்சடங்கு செலவையும் ஏற்றதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தங்களுக்கு வாழ்வு கொடுத்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் குடும்பத்தினர்களுக்கு உதவ சிம்பு மற்றும் தனுஷ் முடிவு செய்ததாகவும் இதற்காக அவர்கள் விரைவில் கிருஷ்ணகாந்த் குடும்பத்தினரை சந்தித்து ஒரு பெரிய தொகையை கொடுப்பார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன