’’ சூப்பர் ஹிட் படம் ’’மாறி மாறிப் புகழ்ந்து கொண்ட நடிகர் சூர்யா …சமந்தா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தயாரித்து நடித்த சூரரைப் போற்று சமூகத்தில் அமேசான் ஒடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலதரப்பிலிருந்து இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் நடிகை சமந்தா இப்படத்தை பார்த்துவிட்டு, நேற்று, இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.
சூரரைப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்…. இந்த வருடத்தின் படம் இது!! சூர்யா, சுதா கொங்கரா மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் அவுட்ஸ்டாண்டிங். இது ஒருநல்ல உந்துகோலான படம் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நடிகர் சூர்யா, தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் சூரரைப் போற்று படக்குழுவைப் பாராட்டியதற்கு உங்களுக்கு நன்றி எனப் பதிவிட்டு சமந்தாவுக்கு டேக் செய்துள்ளார்.
இந்த டுவீட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.