செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (16:18 IST)

கிருஸ்துமஸ் புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பதுமைத் தீர்ப்பாயம் அனுமதி

கிருஸ்துமஸ் புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பதுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவஹ்டும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க மக்களுக்கு நீதிமன்றம் அறிவுத்தியது.

இந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார்  வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கிருஸ்துமஸ் புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பதுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது கொரோனா தொற்று நாட்டில் பரவிவரும் சூழலில் பட்டாசு வெடிப்பது குறித்து மக்களுக்கு பெரும் கேள்விகள் இருந்தது.

இந்நிலையில்,  வரும் கிருஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு அண்று இரவு 11:55 மணி முதல் நள்ளிரவு 12:30 மணிவரை பட்டாசு வெடிக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதியளித்துள்ளது.