செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (15:44 IST)

நடிகர் சூர்யா ரசிகர்கள் நிகழ்த்திய சாதனை….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா.இவர் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இது கொரொனா காலம் என்பதால் மத்திய அரசு வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்த தினம் என்பதால் அவரது ரசிகர்கள் சூர்யாவின் பெயரில் SuriyaBirthdayFestCDP என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் , ரசிகர்கள் உருவாக்கிய சூரரைப் போற்று படத்தின் போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர்.

குறிப்பாக இந்திய நடிகரின் பிறந்த நாள் போஸ்டர் அதிக மக்களால பகிரப்பட்டுள்ளது இதுதான் என்பது சூர்யா ரசிகர்களின்  சாதனையாகப் பார்க்கப்படுகிறது.