சிங்கத்தை இப்புடி சோறு ஆக்க வச்சுட்டாங்களேப்பா - அடுப்பங்கரையில் அசத்தும் சூர்யா!
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா தனது வீட்டில் பெரிய டபராவில் குடும்பத்திற்கே சமைக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி தீயாக பரவி வருகிறது. இதை வைத்து நிறைய மீம்ஸ் பிச்சிகிட்டு பறக்கிறது. சிங்கத்தை வெறிகொண்டு பார்த்திருப்பீங்க ஆன சோறு ஆக்கி பார்த்திருக்கீங்களா.. என்றெல்லாம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். குடுபத்தினர் மீது சூர்யா வைத்துள்ள அக்கறையும், பாசமும் பலருக்கு பாடமாக இருக்கிறது என வெகுவாக அவரை பாராட்டி வருகின்றனர் இணையவாசிகள்.