வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 6 ஜூன் 2020 (14:45 IST)

ஆன்லைனில் படம் வெளியிடுவதால் பலரும் பாதிக்கப்படுவார்கள்- கடம்பூர் ராஜூ

ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காதுஎன தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

சினிமாத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை.

எனவே ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  ஆன்லைனில் ஜோதிய நடிப்பில் பொன்மகள் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.